| ADDED : ஆக 22, 2024 12:30 AM
சென்னை, சென்னை, அமைந்தகரையில் கூவம் ஆற்றின் கரையோரங்களில் கட்டட கழிவுகளை கொட்டி வருவது குறித்து, மே 9ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து தீர்ப்பாயம், கூவம் கரையோரத்தில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவது குறித்து விசாரித்து வருகிறது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரது உத்தரவு:அமைந்தகரை கூவம் ஆற்றின் கரையோரம், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலை திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும், அதற்காகவே அங்கு கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கூவம் ஆற்றை பாதுகாப்பது குறித்து நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கூவம் கரையோரங்களில் உயர்மட்ட விரைவுச் சாலை கட்டுமானப் பணிகள் நடப்பது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை செப்., 19ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.