உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிளாக்கில் மது விற்பனை இருவர் சிக்கினர்

பிளாக்கில் மது விற்பனை இருவர் சிக்கினர்

கொரட்டூர், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட, கொரட்டூர் காவல் நிலைய எல்லையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, மது விற்பவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.தகவலின் அடிப்படையில், கொரட்டூர் டி.என்.எச்.பி., காலனி பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் அதிக விலைக்கு மது விற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அகிலன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 262 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல, கொரட்டூர் வாட்டர்கெனல் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் சோதனையிட்ட போது, தஞ்சையைச் சேர்ந்த மணிகண்டன், 35, என்பவரிடமிருந்து அதிகவிலைக்கு விற்க வைத்திருந்த ஆறு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி