உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாக்கியால் 5 அடி உயர்த்தப்படும் விருகை காளியம்மன் கோவில்

ஜாக்கியால் 5 அடி உயர்த்தப்படும் விருகை காளியம்மன் கோவில்

விருகம்பாக்கம், விருகம்பாக்கம் சந்தை அருகே காளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்த கோவில், 200 ஆண்டுகள் பழமையானது.இது, விருகம்பாக்கம் பகுதியின் கிராம தேவதையாக உள்ளது. இங்கு, மஹா காளியம்மன், துர்க்கை அம்மன், செல்வ கணபதி, வள்ளி சுப்ரமணியர் தெய்வானை, ஆஞ்சநேயர், நவகிரகங்கள்- நாகலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ளது. இதனால், மழைக்காலத்தில் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கை.அத்துடன், இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, கோவில் கருவறை உள்ளிட்ட பகுதியை ஜாக்கி வைத்து 5 அடிக்கு உயர்த்தும் பணிகள் நடக்கின்றன.மகா காளியம்மன் பக்தஜென சபா சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆறு மாதங்களில் பணிகள் முடிந்து பின், மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி