உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு

குடிநீர் வாரிய ஓய்வு ஊழியர் கால்வாயில் சடலமாக மீட்பு

தேனாம்பேட்டை:தேனாம்பேட்டை, நக்கீரன் நகர், 'டி பிளாக்' அருகிலுள்ள கால்வாயில் ஆண் உடல் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று காலை 6:30 மணியளவில் தகவல் கிடைத்தது.போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், 68, என்பதும், குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து, கடந்த 2020ல் ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிந்தது. தனியாக வசித்து வந்த ஸ்ரீதர், கால்வாய் பகுதியில் கிடக்கும் சிறிய இரும்பு துண்டுகளை எடுத்து, அதை விற்று மது அருந்தி வந்துள்ளார்.அதன்படி, மது போதையில் கால்வாயில் விழுந்து இருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. தேனாம்பேட்டை போலீசார் புழுதிவாக்கத்தில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை