திருவொற்றியூர் மண்டலத்திற்கு தினம் 15 எம்.எல்.டி., குடிநீர் தேவைப்படும் நிலையில், 7 - 8 எம்.எல்.டி., அளவிற்கே, குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், அவ்வப்போது தட்டுபாடு நிலவி வருகிறது. ஒரு நாள் இடைவெளியில், ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே வினியோகிக்கப்படும் குடிநீரும், மேடான பகுதிகளுக்கு ஏறுவதற்குள், நிறுத்தப்பட்டு விடுகிறது.இதன் காரணமாக, இரவு நேரத்தில் பெண்கள், காலி குடங்களுடன், வீதி வீதியாக குடிநீர் வரும் குழாய்களை நோக்கி படையெடுப்பது மட்டுமில்லாமல், சண்டையிட்டும் கொள்கின்றனர்.குறிப்பாக, எர்ணாவூரின் எர்ணீஸ்வரர் நகர், பஜனை கோவில் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, கன்னிலால் லே அவுட், காமராஜர் நகர், பிருந்தாவன் நகர் போன்ற பல பகுதிகளில், ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு, மணலி - எம்.எப்.எல்., சந்திப்பில் உள்ள, குடிநீரேற்றம் தொட்டிக்கு குடிநீர் வரத்து குறைவு மற்றும் மின் மோட்டர் பழுது உட்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன. எர்ணாவூர் பகுதிகளில், வீடுகளில் பணம் கட்டி இணைக்கப்பட்டுள்ள, கீழ்நிலைத் தொட்டிகளுக்கு கூட, தண்ணீர் வருவதில்லை. மாறாக, பணம் கொடுத்து, கேன் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு வாரமாக அவதிஎர்ணாவூர், எர்ணீஸ்வரர் நகர் பகுதியில் ஒருவாரமாக குடிநீர் வினியோகம் இல்லை. காலி குடங்களுடன், தெரு தெருவாய் அலைந்து வருகிறோம். வெயில் காலம் என்பதால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. குடிநீருக் காகவே, தனியாரிடம் அதிகம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.ஜி. ஆரோக்கியசாமி, 63,எர்ணாவூர்.மேடான பகுதிகாமராஜர் நகர் மேடான பகுதியாக இருப்பதால், குடிநீர் வினியோகத் தின்போது, அழுத்தம் குறைவாக இருப்பதால், எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இது குறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், எந்த பலனும் இல்லை. பி.நிரஞ்சன், 54,எர்ணாவூர்