உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடற்கரையில் குவியும் குப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடற்கரையில் குவியும் குப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருவொற்றியூர், திருவொற்றியூரில், என்.டி.ஓ., குப்பம், திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பம், கிளிஜோசியம் நகர், திருவொற்றியூர் குப்பம், கே.வி.கே., குப்பம், எண்ணுாரின் பாரதியார் நகர், சின்னகுப்பம், தாழங்குப்பம் ஆகிய இடங்களில் கடற்கரைகள் உள்ளன.இந்நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரையில், சிலர் குப்பை கொட்டி செல்கின்றனர். அதை அகற்றுவதற்குள், மாநகராட்சி ஊழியர்கள் படாதபாடு படுகின்றனர்.இதற்கு தீர்வாக, என்.டி.ஓ., குப்பம் கடற்கரையில், சில மாதங்களுக்கு முன், 500 மீட்டர் துாரத்திற்கு, கம்பி வேலி அமைக்கப்பட்டது.நாளடைவில், உரிய பராமரிப்பின்றி போனதால், அந்த கம்பி வேலிகள் மாயமாகின. இதனால், மீண்டும் சர்வசாதாரணமாக குப்பை கொட்டப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கடற்கரை பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ