உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நாதப்ரம்மம் நிகழ்த்திய 12 மணி நேர இசை நிகழ்ச்சி

 நாதப்ரம்மம் நிகழ்த்திய 12 மணி நேர இசை நிகழ்ச்சி

சென்னை: 'நாதப்ரம்மம்' சார்பில், 12 மணி நேர வைகுண்ட ஏகாதசி இசை விழா, நங்கநல்லுார் ஸ்ரீ சுதர்சன கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கியது. மதுரை ஸ்ரீ சக்ர ராஜேஸ்வரி பீடம், பூஜ்ய ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், இசை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கடலுார் கோபி பாகவதருக்கு, 'நாத பாகவத சிரோமணி' விருது வழங்கிய பின், அவர் பேசியதாவது: நாதப்ரம்மம் சார்பில், 24 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது பெற்றவருக்கும், எனக்கும் சம வயது. உடல் உபாதைகளை மறந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறோம். கோபி பாகவதர், பல்வேறு மாநிலம், நாடுகளுக்கு சென்று பஜனை பாடி வருவதால், உலகளவில் பஜனை போற்றப்படுகிறது. இந்த தொடர் இசை நிகழ்ச்சி, முடியும் வரை, பங்கேற்று செல்ல வேண்டும். இவர் அவர் பேசினார். தொடர்ந்து, பூஜ்ய ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் கோபி பாகவதர் குழுவினரின், நாமசங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. ரஞ்சனி கவுசிக், ராம் சுந்தர், கல்பலதிகா ரவி, ஹரி அக்னி சர்மன் கப்பியூர் ஆகிய குழுவினரின், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் கலந்த இசை நிகழ்ச்சி, இன்று காலை 6:00 மணி வரை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை