உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.47 கோடியில் திட்டப் பணிகள் துவக்கம்

ரூ.2.47 கோடியில் திட்டப் பணிகள் துவக்கம்

சென்னை, சென்னை, சின்னமலை வெங்கடாபுரம் பகுதியில், தென்சென்னை எம்.பி., மேம்பாட்டு நிதியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டடத்திற்கு, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்றுமுன்தினம் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, ஜோதியம்மாள் நகரில் 20 லட்சம் ரூபாயில் பல்நோக்கு கட்டடம், 30 லட்சம் ரூபாயில் நுாலகம், 20 லட்சம் ரூபாயில் நியாய விலைக்கடை மற்றும் ஆர்.வி.கே.நகரில் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இந்நிகழ்வில், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை