உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கடைகளில் திருட்டு 3 சிறுவர்கள் கைது

 கடைகளில் திருட்டு 3 சிறுவர்கள் கைது

துரைப்பாக்கம்: மருந்து மற்றும் ஜூஸ் கடைகளின் பூட்டை உடைத்து, பணம் திருடிய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த 10ம் தேதி, பெருங்குடி, கந்தன்சாவடியில் உள்ள மருந்து கடை பூட்டை உடைத்து, 30,000 ரூபாய் மற்றும் மொபைல் போன், ஊசி திருடப்பட்டது. மேலும், தரமணியில் உள்ள ஒரு ஜூஸ் கடை பூட்டை உடைத்து 17,000 ரூபாய் மற்றும் ஒரு மொபைல் போன் திருடப்பட்டது. துரைப்பாக்கம் மற்றும் தரமணி போலீசாரின் விசாரணையில், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள் என தெரிந்தது. நேற்று, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தி, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி