உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 3 பேர் கைது

பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் 3 பேர் கைது

வடக்கு கடற்கரை, கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்தவர் சாமுவேல், 20; மாநில கல்லுாரி மாணவர். இவர், ஜன., 12ம் தேதி காலை, பீச் ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில், நண்பர்கள் பிரின்ஸ், சஞ்சய் ஆகியோருடன் நின்றிருந்தார்.அப்போது, அங்கு வந்த பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் மூவர், சாமுவேலை கத்தியால் வெட்டி தப்பினர். படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களான பெரியபாளையம் புவியரசு, 18, வடகரை சுஜித்குமார், 20, மற்றும் 17 வயதுடைய மாணவர் ஆகியோரை, வடக்கு கடற்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ