உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் தவறி விழுந்த3 மாணவர்கள் படுகாயம்

விபத்தில் தவறி விழுந்த3 மாணவர்கள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, முனுசாமி நகரை சேர்ந்தவர் அனுஷ்குமார், 19. கும்மிடிப்பூண்டி அருகே பட்டுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 19, ஆந்திர மாநிலம், காரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் கண்ணா, 18. இவர்கள் மூவரும் பொன்னேரி அருகே உள்ள தனியார் அறிவியல் மற்றும் கலை கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகின்றனர்.நேற்று காலை, மூவரும் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் கல்லுாரிக்கு சென்றனர். ஹரிஷ் கண்ணா இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச்சுவரில் மோதி, 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.மூவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ