| ADDED : நவ 17, 2025 12:53 AM
குன்றத்துார்: குன்றத்துாரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்; மற்றொருவர் பலத்த காயமடைந்தார். குன்றத்துார் அருகே சோமங்கலம், லங்காபுரியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 54; கொத்தனார். இவர், நேற்று 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கில், குன்றத்துார் - சோமங்கலம் சாலையில் சோமங்கலம் நோக்கி சென்றார். அதேவேளையில், ஸ்ரீபெரும்புதுார், மகாணியம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஏழுமலை, 30, என் பவர், சோமங்கலத்தில் இருந்து குன்றத்துார் நோக்கி 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வந்து கொண்டிருந்தார். இரு பைக்குகளும், பூந்தண்டலம் அருகே சக்தி நகர் முந்திரி காட்டுப்பகுதியில் உள்ள சாலை வளைவை கடந்து சென்றபோது, நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த ஏழுமலை, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற் று வருகிறார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.