உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நல்வழிப்படுத்த தவறிய அரசு

 நல்வழிப்படுத்த தவறிய அரசு

சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓடிஷா வாலிபர் மீதான தாக்குதல், தி.மு.க., ஆட்சியில், கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், இளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதை காட்டுகிறது. இந்த கொடூர செயலுக்கு தி.மு.க., என்ன சொல்லப்போகிறது. விஜய், த.வெ.க., தலைவர் திருத்தணி தாக்குதல் சம்பவம், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை, அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. போதை பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப்பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. மீதமுள்ள ஆட்சிகாலத்திலாவது போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் தமிழகம் போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது. கல்வியில் சிறந்த தமிழகத்தை, கஞ்சாவின் புகலிடமாக தி.மு.க., அரசு மாற்றி உள்ளது. தமிழக இளைஞர்களை அழிவில் இருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு அறிவை புகட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவிக்குமார், வி.சி., - எம்.பி., தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, தமிழகத்தில், 2023ம் ஆண்டில், 101 கொலைகளை சிறுவர்கள் செய்துள்ளனர். சிறுவர்களுக்கு தண்டனை குறைவு என்பதால், திட்டமிட்டு சிறுவர்கள் மூலம் இதுபோன்ற செயல்கள் நடத்தப்படுகின்றன. குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களிடம் போலீசார் கனிவாக நடத்து கொள்ளக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை