உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நள்ளிரவில் மர்மமாக தீப்பிடித்த ஸ்கூட்டர்

நள்ளிரவில் மர்மமாக தீப்பிடித்த ஸ்கூட்டர்

மீனம்பாக்கம், சென்னை, மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, தனியார் வங்கி ஏ.டி.எம்., முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'ஹோண்டா டியோ ஸ்கூட்டர்' ஒன்று, மர்மமான முறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதைக் கண்ட மாநகராட்சி குப்பை அகற்றும் 'யுர்பேசர்' நிறுவனத்தினர், குப்பை தொட்டிகளை சுத்தப்படுத்த தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் வாயிலாக, ஸ்கூட்டரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், ஸ்கூட்டர் முற்றியிலும் எரிந்து எலும்புக்கூடானது. எரிந்த வாகனத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இந்த சம்பவம் குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை