பொது 35 அடி மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்
ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 22; தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை வீட்டில் இருந்து, கத்திப்பாரா மேம்பாலத்தில் விமான நிலையம் நோக்கி செல்லும் பாதையில் நடந்து சென்றார். பின், 35 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்து, கிண்டி செல்லும் சர்விஸ் சாலையில் விழுந்தார். இதில், இடுப்பு எலும்பு உடைந்து படுகாயமடைந்த அவரை, ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு, கிண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.