உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.5.81 கோடியில் ஏசி மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது

ரூ.5.81 கோடியில் ஏசி மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, ஓ.எம்.ஆர்., பொன்னியம்மன் கோவில் முதல் தெருவில், 21,700 சதுர அடி பரப்பு உடைய மாநகராட்சி இடம் உள்ளது. இதில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மண்டபம் உள்ளது.மிகவும் பழுதடைந்த இம்மண்டபத்தை இடித்து, 'ஏசி' மண்டபம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 5.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், 16,776 சதுர அடி பரப்பில் இரண்டு மாடி உடைய கட்டடம் கட்டப்படுகிறது. முதல் மாடியில் 400 பேர் அமரக்கூடிய உணவு பரிமாறும் இடம், இரண்டாம் மாடியில் 800 பேர் அமரக்கூடிய நிகழ்ச்சி அரங்கம் அமைக்கப்படுகிறது.தரைதளத்தில், 35 கார் மற்றும் 70 இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணி இம்மாத இறுதிக்குள் துவங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இந்த மண்டபம் வந்ததும் ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த வாடகையில் 'ஏசி' மண்டபத்தை பயன்படுத்த முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி