உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

கோடம்பாக்கம் - தாம்பரம் வழித்தடம் மற்றும் தாம்பரத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. அதனால், மேற்கண்ட வழிகளில் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை கூடுதலாக்க வேண்டும் என, அவற்றின் நிர்வாகிகளுக்கு, ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்தினர்.அதன்படி, கோடம்பாக்கம் - தாம்பரம் தடத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 3:15 மணி, தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில், அதிகாரிகளை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும், மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.தாம்பரம் தடத்தில், இன்று முதல் 22ம் தேதி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், இரவு 11:45 மணி முதல் அதிகாலை 4:30 வரை, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ