உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம். பல்கலை சாம்பியன்

அகில இந்திய வாலிபால் போட்டி எஸ்.ஆர்.எம். பல்கலை சாம்பியன்

சென்னை:இந்திய பல்கலை கூட்டமைப்பு, குருக்ஷேத்திரா பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைக்கு இடையிலான வாலிபால் போட்டி, ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரா பல்கலையில், கடந்த 15ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இதில், நாடு முழுதும் இருந்து மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கு மண்டலங்களில் தேர்வான, 16 பல்கலை அணிகள் பங்கேற்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் - அவுட் முறையில் நடந்தது. முதல் லீக் சுற்றில், தமிழகம் சார்பில் சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் நாக்பூர் ஆர்.டி.எம்., பல்கலை அணிகள் மோதின. அதில், 25 - 16, 25 - 12, 25 - 12 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மூன்று லீக் சுற்றிலும் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்றது.காலிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 19, 25 - 14 என்ற கணக்கில் சிம்லாவின் எச்.பி., பல்கலையை தோற்கடித்தது. அரையிறுதியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 25, 25 - 21, 25 20, 21 - 24, 15 - 8 அமிர்தசரஸ் ஜி.என்.டி.யூ., பல்கலை வீழ்த்தியது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ஹரியானாவின் குருக்ஷேத்திரா மோதியது. அதில், 25 - 22, 25 - 20, 25 - 27, 25 - 21 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை