உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு கவுன்சிலருக்கு அண்ணாமலை கிரீடம்

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு கவுன்சிலருக்கு அண்ணாமலை கிரீடம்

சென்னை, தென்சென்னை லோக்சபா தொகுதிக்கான, பா.ஜ.,வின் செயல்வீரர்கள் கூட்டம், சோழிங்கநல்லுாரில் நடந்தது. இதில், பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில், அக்கட்சியின் தென்சென்னை தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், இணை பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில செயலாளர் சூர்யா, தொகுதி பார்வையாளர் பாஸ்கரன், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய்சத்யன், தென்சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ், சோழிங்கநல்லுார் தொகுதி இணை பொறுப்பாளர்கள் மாலா, செல்வகுமார், முத்துமாணிக்கம், மண்டல தலைவர் மோகன்குமார், வட்ட தலைவர் கார்த்திக், புருசோத்தமன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சென்னை மாநகராட்சி 198வது வார்டு கவுன்சிலரும், பா.ஜ.,வின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவரும் மற்றும் சோழிங்கநல்லுார் தொகுதி பொறுப்பாளருமான லியோ சுந்தரம், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து, 5,000 பேருக்கு உணவு வழங்கினார்.இவருக்கு, மாநில தலைவர் அண்ணாமலை, கிரீடம் சூட்டி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை