உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா நினைவு நாள் புறநகர் கோவில்களில் பொது விருந்து

அண்ணா நினைவு நாள் புறநகர் கோவில்களில் பொது விருந்து

தாம்பரம்: 'பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர். விஜயும் ஆரம்பித்துள்ளார். அவர், மக்களுக்கு செய்யும் சேவையை பொறுத்திருந்து பார்ப்போம்,' என்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோவிலில், நேற்று, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. இதில், அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு புடவை வழங்கினார். மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பொது விருந்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். அப்போது, அவர் கூறுகையில், 'இந்துக்களுக்கு தி.மு.க.,வும், திராவிட இயக்கங்களும் விரோதி அல்ல. பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜயும் கட்சி ஆரம்பித்துள்ளார். அவர், மக்களுக்கு செய்யும் சேவையை பொறுத்திருந்து பார்ப்போம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை