உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முதியவரிடம் ரூ.4 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

 முதியவரிடம் ரூ.4 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன், 73; ஓய்வு பெற்ற டி.வி.எஸ்., நிறுவன ஊழியர். செப்., 26ம் தேதி, 'வாட்ஸாப்' செயலியில் இவரிடம் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என, அறிமுகப்படுத்தி உள்ளார். 'உங்களது பெயரில் பெறப்பட்ட மொபைல் போன் சிம் கார்டு, சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது' என கூறியுள்ளார். சி.பி.ஐ., அமலாக்கத் துறை போலீஸ் கைது நடவடிக்கையை தவிர்க்க, ஆர்.பி.ஐ., சரிபார்ப்பு எனக்கூறி, பல வங்கி கணக்குகளுக்கு பெரும் தொகையை மாற்றுமாறு மிரட்டி உள்ளார். இதற்கு பயந்த முதியவர், மர்ம நபர் கொடுத்த வெவ்வேறு கணக்குகளுக்கு, செப்., 26 முதல் அக்., 10ம் தேதி வரை, 4.15 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ்குமார், 23, என்பவர் மோசடி செய்தது தெரிந்தது. அவரை நவ., 1ல் கைது செய்த போலீசார், வங்கி கணக்குகள் தந்து உதவிய, துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார், 35, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை