உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பங்கு சந்தை முதலீடு என சுருட்டல் மோசடி நபரின் முன்ஜாமின் ரத்து

 பங்கு சந்தை முதலீடு என சுருட்டல் மோசடி நபரின் முன்ஜாமின் ரத்து

சென்னை: சென்னை உத்தண்டியை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரிடம், சென்னையை சேர்ந்த ஜனனி என்பவர் அறிமுகமானார். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என கூறி, 1.74 கோடி ரூபாயை, டாக்டரிடம் பெற்றார். பங்கு சந்தையில் இருந்து லாபம் எதும் வராததால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், டாக்டர் புகார் அளித்தார். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காதலன் சரவணகுமார் என்பவருடன் சேர்ந்து ஜனனி, கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. மோசடி வழக்கில் ஜனனி, அவரது தாயாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்; நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். அதேபோல், தலைமறைவான ஜனனியின் காதலன் சரவணகுமார், நிபந்தனை முன் ஜாமின் பெற்று, மோசடி பணத்துடன் துபாய்க்கு தப்பினார். இந்நிலையில், சரவணகுமாருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்ய கோரி, பணத்தை இழந்த டாக்டர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. 'சரவணகுமார் வெளிநாடு தப்பியதால், லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது' என, போலீசார் தெரிவித்தனர். சரவணகுமார் தரப்பில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமினை நீட்டிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன் ஜாமின் நிபந்தனைகளை சரவணகுமார் நிறைவேற்ற தவறியதால், அவரின் முன் ஜாமினை ரத்து செய்த நீதிபதி, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை