| ADDED : ஜன 14, 2024 12:36 AM
சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்து வரும், 47வது சென்னை புத்தகக் காட்சியில் இன்று பகல் 12:30 முதல் மாலை 5:30 மணி வரை, மணிமேகலை பிரசுரத்தின் நுால் வெளியீட்டு விழா நடக்கவுள்ளது.'அந்துமணி பதில்கள்' பாகம் -- 8, 'தமிழ்வாணனின் மர்ம நாவல்கள்' பாகம் -- 7 மற்றும் -- 8, 'லேனாவின் பார்வையில் சமூக அலசல்கள்' உட்பட 47 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.இவ்விழாவில், பத்திரிகையாளர் எஸ்.ரஜத், எழுத்தாளர் தாமரை ஹரிபாபு ஆகியோருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுடன் கூடிய தமிழ்வாணன் நினைவு விருது வழங்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நக்கீரன், சுந்தர் மோகன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, காஞ்சிபுரம் தவத்திரு சஞ்சீவி ராஜா சுவாமிகள், சினிமா இயக்குனர் தங்கர்பச்சான், மணிமேகலை பிரசுரத்தின் தலைவர் லேனா தமிழ்வாணன், நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.