மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
4 hour(s) ago
பனகல் பூங்கா - போட் கிளப் மெட்ரோ சுரங்க பணி துவக்கம்
4 hour(s) ago
கவிஞர் அருணாச்சலம் கவிதை நுால் வெளியீடு
4 hour(s) ago
கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, வாகன போக்குவரத்து நிறைந்தது. இச்சாலையில், கொட்டிவாக்கம் பகுதியில், காலை, மாலை நேரங்களில் வியாபாரிகள் மீன்கள் விற்கின்றனர். வெயில் படாதபடி, சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் பெரிய குடை விரித்து, அதன் கீழ் அமர்ந்துள்ளனர்.தவிர, மீன் வாங்க வருவோர், தங்களின் வாகனங்களை சாலையிலே நிறுத்துவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கவும், வியாபாரிகள் மீன்கள் விற்கவும் நடவடிக்கை எடுக்க, பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்நிலையில், கொட்டிவாக்கத்தில் மீன் சந்தை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.பெருங்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் முரளி கூறியதாவது:கொட்டிவாக்கத்தில், தென்சென்னை எம்.பி., நிதி 62.5 லட்சம் ரூபாயில் மீன் மார்க்கெட் கட்டப்படுகிறது. 2,030 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளத்துடன் அமைகிறது. இதில், வியாபாரிகள் அமர்ந்து விற்பனை செய்யும் வகையில், கடைகள் கட்டப்படுகின்றன.கழிவுகள் அகற்றும் வசதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago