உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடமாநில வாலிபர்கள் மீது தாக்குதல்

வடமாநில வாலிபர்கள் மீது தாக்குதல்

ஓட்டேரி, உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சூரஜ், 30. ஓட்டேரியில் தங்கி, பெயின்டிங் வேலை செய்கிறார். இவரது நண்பர் திலோக்நாத், கடந்த 17ம் தேதி இருவரும், பிரிக்ளின் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் வந்த சிலர், இருவரையும் தாக்கி பணத்தை பறித்து சென்றனர். காயமடைந்த சூரஜ், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், பெரம்பூரை சேர்ந்த மதன்குமார், 19 மற்றும் பிரதீப், 20 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை