உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பை கண்டித்தவர் மீது தாக்குதல்; மண்டை உடைப்பு

ஆக்கிரமிப்பை கண்டித்தவர் மீது தாக்குதல்; மண்டை உடைப்பு

வியாசர்பாடி:வியாசர்பாடி கருணாநிதி சாலை, இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜா, 35. இவர் பர்மா பஜாரில் சொந்தமாக மொபைல்போன் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது வீட்டருகே லோகு என்பவர் வைத்துள்ள பிரிஜ் சர்வீஸ் சென்டர் முன், சாலை நடைபாதை மற்றும் தெருவை ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை ராஜா தட்டிக் கேட்டு உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், லோகு மற்றும் கடையில் வேலை செய்யும் நபர்கள், கல்லால் ராஜாவை தாக்கியுள்ளனர். இதில் பின் தலையில் காயம்பட்ட ராஜா, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில், ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது.இதுகுறித்த புகாரின்படி, வியாசர்பாடியை சேர்ந்த லோகநாதன், 40, மற்றும் அலமாதியை சேர்ந்த மதன்குமார், 21, ஆகிய இருவரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி