உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெற்கு ரயில்வேயில் 100 பேருக்கு விருது

தெற்கு ரயில்வேயில் 100 பேருக்கு விருது

சென்னை, தெற்கு ரயில்வேயின் 68வது ரயில்வே வார விழா, சென்னை ஐ.சி.எப்.,பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நேற்று நடந்தது. இதில், 2022 - 23ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டு, முதலிடம் பிடித்த சென்னை ரயில் கோட்டத்துக்கு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் விருது வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் 17 பேருக்கும், அலுவலர்கள் 83 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.விழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது: ரயில்கள் பாதுகாப்பாக இயக்குவதிலும், பயணியருக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதிலும், தெற்கு ரயில்வே சிறந்து விளங்குகிறது.அதேபோல், ரயில் நிலையங்களிலும் பயணியருக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில், ரயில்வே பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தெற்கு ரயில்வே, முதன்மை தலைமை பணியாளர் அதிகாரி ஹரி கிருஷ்ணன் உட்பட அதிகாரிகள், பணியாளர்கள் என, 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை