| ADDED : ஜன 29, 2024 01:39 AM
சென்னை:சென்னை காவேரி மருத்துவமனை சார்பில், பெசன்ட் நகரில் இருந்து, 10 கி.மீ., 5 கி.மீ., துாரத்துக்கான மாரத்தான், போட்டிகள் நடந்தன.இதை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், உதவி கமஷனர் முருகேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கினர்.காவேரி மருத்துவமனையின் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:உயிரைக் குடிக்கும் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிந்தால், தொழில்நுட்ப உதவியுடன் குணப்படுத்தலாம். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை.பொதுவாக அடிக்கடி ஏற்படும் புண்கள், தொடர் இருமல், ரத்தக்கசிவு, மார்பகக்கட்டி, குரல் மாற்றம், பிறப்புறுப்பில் வெளியேறும் வெள்ளை திரவம் போன்ற அறிகுறிகள், இதன் முதல்நிலை அறிகுறியாக இருக்கலாம். அதை, பரிசோதனையின் வாயிலாக கண்டறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.மாரத்தானில், காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் இயக்குனர் வைத்தீஸ்வரன், மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.