உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உணவு டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

உணவு டெலிவரி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

அண்ணா நகர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் பல்வேறு வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் சார்பில், உணவு 'டெலிவரி' செய்யும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பின், அண்ணா வளைவில் இருந்து டவுண்டானா, அண்ணா நகர் காவல் நிலையம் வரை, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசங்களுடன் பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில், வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர் குமார், அண்ணா நகர் உதவி கமிஷனர் சுந்தராஜன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை