மேலும் செய்திகள்
நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
08-Jan-2025
ஆவடி, அம்பத்துார், அத்திப்பட்டு, கலைவாணர் நகரைச் சேர்ந்த மேகநாதன் மனைவி வசந்தி, 50. இவருக்கு, அயப்பாக்கம் தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தேவேந்திரன், 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தேவேந்திரன் தனக்கு அயப்பாக்கம், பவானி நகரில், 875 சதுர அடி, அரசு பட்டா நிலம் இருப்பதாக கூறியுள்ளார்.அதன்படி, 11.50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை, வசந்தியின் கணவர் மேகநாதன் பெயரில் ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.நிலம் குறித்து, மேகநாதன் விசாரித்த போது, அது அரசு புறம்போக்கு நிலம் என தெரிந்தது. இதையடுத்து, பணத்தை திருப்பிக் கேட்ட போது, தேவேந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. திருமுல்லைவாயில் போலீசார், தேவேந்திரனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
08-Jan-2025