உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநகர பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி

 மாநகர பஸ் மோதி பைக்கில் சென்றவர் பலி

பெருங்களத்துார்: மாநகர பேருந்து மோதி, பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். பீர்க்கன்காரணை, சீனிவாசா நகர், லட்சுமி நரசிம்மர் தெருவை சேர்ந்தவர் சீதாராமன், 50. நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டையில் இருந்து பெருங்களத்துார் நோக்கி, எலக்ட்ரிக் பைக்கில் சென்றார். தாம்பரம் கடப்பேரி அருகே சென்ற போது, சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நடந்து சென்றார். அந்த பெண் மீது மோதாமல் இருக்க, தனது வாகனத்தை இடது புறமாக சீதாராமன் திருப்பிய போது, திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியது. இதில், பேருந்து டயர் ஏறி படுகாயமடைந்த சீதாராமன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும், பேருந்தை அங்கேயே விட்டு தப்பினர். போலீசார் விரைந்து வந்து, சீதாராமன் உடலை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி