உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.299ல் ரத்த பரிசோதனை

ரூ.299ல் ரத்த பரிசோதனை

சென்னை :சென்னை கீழ்ப்பாக்கத்தில், 'அல்பா கேர்' மருத்துவமனையை, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்த மருத்துவமனையில், துவக்க கால நிகழ்வாக இன்று, 299 ரூபாய் சிறப்பு சலுகை விலையில், 'ஹீமோகுளோபின், ரத்த சர்க்கரை, ரத்த கொலஸ்ட்ரால், தைராய்டு, கல்லீரல், சிறுநீரக அளவீடுகள்' ஆகிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:'மைனர் ஆப்பரேஷன்' மேற்கொள்ளும் இது போன்ற மருத்துவமனைகள், மருத்துவ துறையை மேலும் முன்னேற்றும். மைனர் ஆப்பரேஷனுக்கு பின், ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். இந்த மருத்துவமனையை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை