உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாழம்பூரில் பிரம்மோற்சவம் துவக்கம்

தாழம்பூரில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்போரூர், தாழம்பூர் ஊராட்சி திரிசக்தி அம்மன் கோவிலில், ஞானசக்தியாக சரஸ்வதி தேவியும், இச்சா சக்தியாக லட்சுமி தேவியும், கிரியா சக்தியாக தாய் மூகாம்பிகையும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.இக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதற்காக, கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து, கொடி மரத்தில் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். வரும் 23ல் தேர் திருவிழா, 25ல், விடையாத்தி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ