மேலும் செய்திகள்
அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.,வினர் 99 பேர் மீது வழக்கு
5 minutes ago
சர்வ தேச ஸ்குவாஷ் ஜோஷ்னா அதிர்ச்சி தோல்வி
6 minutes ago
இன்று இனிதாக ...(06.12.2025) சென்னை
7 minutes ago
தீபத் திருவிழா கோலாகலம்
21 hour(s) ago
சென்னை: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத் தில், ஜன., 7ம் தேதி, 49வது சென்னை புத்தக்காட்சி துவங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி'யின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், பபாசியின் பொறுப்பாளர் களுக்கான காலம் நிறைவடைந்ததால், கடந்த 2ம் தேதி, தேர்தல் நடத்தப்பட்டது. அதில், தலைவராக ஆர்.எஸ்.சண்முகம், செயலராக வயிரவன், பொருளாளராக வெங்காடசலம் மற்றும் துணைத்தலைவர் இணை செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கான பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று, சென்னையில், 49வது புத்தகக்காட்சி நடத்துவது குறித்து ஆலோசித்தனர். தொடர்ந்து, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில், வரும் ஜன., 7 முதல் 19ம் தேதி வரை புத்தகக்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளனர்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago
21 hour(s) ago