உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை : சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே ஆக ஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.விழாக்காலத்தையொட்டி, பயணிகள் நெரிசலை குறைப்பதற்காக, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இச்சிறப்பு ரயில்கள், ஆகஸ்ட் 16, 23, 30ம் தேதியும், செப்டம்பர் 6, 13, 20, 27ம் தேதிகளிலும், அக்டோபர் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த தேதிகளில் இரவு, 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள், அடுத்தநாள் மதியம் 2 மணிக்கு, நாகர்கோவில் சென்று சேரும்.இதேபோல, நாகர்கோவிலில் இருந்து, சென்னைக்கு, ஆகஸ்ட் 17, 24, 31ம் தேதிகளும், செப்டம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளிலும், அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.நாகர்கோவிலில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்கள் அடுத்தநாள் காலை 8.25 மணிக்கு சென் னை சென்ட்ரல் வந்தடையும். இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை