உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை:பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கம்ப்யூட்டர், 'ஏசி' உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்தன.நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் மூன்றாவது மாடியில், நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு பிரிவினருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.விபத்தில் அலுவலகத்திலிருந்த, கம்ப்யூட்டர், நாற்காலி, 'ஏசி' மற்றும் பைல்கள் உள்ளிட்ட பொருட்கள், தீயில் எரிந்து நாசமாயின. மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை