உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி

 புத்தாண்டு கொண்டாட சென்ற சென்னை பெண் விபத்தில் பலி

வானுார்: புதுச்சேரியில், புத்தாண்டு கொண்டாட காரில் சென்ற பெண் விபத்தில் சிக்கி இறந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். சென்னை, மேடவாக்கத்தை சேர்ந்தவர் அதிதிகுப்தா, 22. இவர், தன் நண்பர்களான கர்நாடகாவை சேர்ந்த கனிஷ்கா, 22, சென்னை, அயனாவரம் ஸ்ரீபால், 19, சித்தார்த் பேகரா ஆகியோருடன் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட, நேற்று முன்தினம் 'மஹிந்திரா' காரில் வந்தனர். டிரைவர் வெங்கட் காரை ஓட்டினார். புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், மாலை, 5:00 மணியளவில், எடையன்குளம் அருகே வந்தபோது, பைக் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க, வெங்கட், 'பிரேக்' பிடித்துள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிதி குப்தா இறந்தா ர். மற்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். கிளிய னுார் போலீசார் விசாரிக்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை