உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு

 ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு

சிட்லப்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பு களால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கியது. கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஏரி சீரமைப்பு பணி, 2019ல் துவங்கியது. ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி ஆழப்படுத்தப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கற்களால் கரை, நடைபாதை, பூச்செடி, திறந்தவெளி அரங்கு, சிறுவர் விளையாட்டு பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இந்த ஏரியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ