உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிவில் நீதிபதி தேர்வு: ஈஸ்வர் முதலிடம்

சிவில் நீதிபதி தேர்வு: ஈஸ்வர் முதலிடம்

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்துடன் இணைந்து, சிவில் நீதிபதிகளுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தியது.இதில் பயிற்சி பெற்று இதுவரை 206 பேர் பதவிகளில் அமர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு, சிவில் நீதிபதிக்கான இலவச பயிற்சி வகுப்பில், 31 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, நேர்முக தேர்வுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டன.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு முடிவுகள், கடந்த ஜன., 10ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் பயிற்சி பெற்ற திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடைச் சேர்ந்த வி.ஈஸ்வர், மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை