உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அண்ணா நகரில் துாய்மை பணி ஒப்பந்தம் ரத்து

 அண்ணா நகரில் துாய்மை பணி ஒப்பந்தம் ரத்து

சென்னை: சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை, தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலத்தில் துாய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த மாதம் 28ல் நான்கு ஒப்பந்தங்கள் பெறப்பட்டன. இந்த இரு மண்டலங்களிலும் வழங்க வேண்டிய துாய்மை பணிகள் தரமாக அமைக்க வேண்டி உள்ளதால், முன்னதாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த ஆவணம், தற்போது நிலவும் தேவைகளுக்கு முறையாக பொருந்தாமல் உள்ளது. இதனால் கோரப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, திருத்தப்பட்ட நிதி மதிப்பீடுகளுடன் புதிய ஒப்பந்தம் வெளியிடப்படும். இதனால் ஏற்கனவே கோரப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி