உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சி.எம்.டி.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு

 சி.எம்.டி.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைப்பு

சென்னை: சி.எம்.டி.ஏ., நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம், மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். வீட்டு வசதி துறையின் கீழ் இயங்கும் சி.எம்.டி.ஏ., எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வாயிலாக ஆவடி, அண்ணனுார், கோணம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10.8 கோடி ரூபாய் செலவில் 20 வகுப்பறைகள், பல்நோக்கு கூடம், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகம், நுாலகம், நவீன கழிப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 4.47 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. புழல், மேட்டுப்பாளையம் சீனிவாசன் தெருவில் உள்ள கால்பந்து மைதானத்தில் 4.27 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்கள் இருக்கை, உடற்பயிற்சி கூடம், நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் உள்ள சிறிய கால்பந்து மைதானத்தில், 1.29 கோடி ரூபாய் செலவில் பார்வையாளர்கள் இருக்கை பகுதி, வீரர்கள் அறை, நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வா று, 20.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்டடங்களை, தலைமை செயலகத்தில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மு தல்வர் ஸ்டாலின் நே ற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை