உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு

நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயன்றவரால் சலசலப்பு

ஆவடி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி, 51. இவர், நேற்று காலை, பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு பெட்ரோல் ஊற்றிய ஆடைகளை அகற்றி, வேறு ஆடை உடுக்க செய்து விசாரித்தனர்.அதில், வீடு கட்டுதற்காக, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 'ஆப்செட் பைனான்சியல் பிரைவேட் லிட்' என்ற வங்கியில், 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். கடனை முறையாக செலுத்தவில்லை. இதனால் வங்கி சார்பில், அவர் மீது, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.சில வாரங்களுக்கு முன், வங்கிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்த நிலையில், அவர் வங்கிக்கு கொடுத்த காசோலை பிரச்னையால், 'செக்' மோசடி வழக்கும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் வங்கியின் மூலம் தொடரப்பட்டது.நேற்று காலை அதற்கான விசாரணைக்காக, அங்கு சென்ற ருத்ரமூர்த்தி, நீதிபதியை சந்தித்து தன் நிலையை தெளிவுப்படுத்த முயன்றிருக்கிறார். அதற்கு அனுமதி தரப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்தவர், நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை