உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிர்வாணமாக்கி ராகிங் சீனியர்கள் மீது புகார்

நிர்வாணமாக்கி ராகிங் சீனியர்கள் மீது புகார்

மடிப்பாக்கம், சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் யுவன், 19; ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயில்கிறார். இவர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கல்லுாரியில் படிக்கும் சீனியர் மாணவி என் தோழி. வெளிநாட்டிற்கு செல்லும் அவரை, புழுதிவாக்கத்தில் இருந்து விமான நிலையம் அழைத்துச் சென்றேன். எங்களுடன், வேளச்சேரியைச் சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட சீனியர் மாணவர்கள் வந்தனர்.தோழியை, விமான நிலையத்தில் இறக்கிவிட்ட பின், என்னை காரில் அழைத்து வந்த சீனியர் மாணவர்கள், என் உடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி அடித்தனர். அதை வீடியோவாக எடுத்தனர். இணையத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு, என் வங்கி கணக்கில் இருந்து, 10,000 ரூபாய் பறித்தனர். மேலும், 20,000 ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து, மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம், கோவை தனியார் பொறியியல் கல்லுாரி மாணவருக்கு நடந்ததுபோல் இந்த மாணவருக்கும் 'ராகிங்' கொடுமை நடந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை