மேலும் செய்திகள்
இன்று இனிதாக பெங்களூரு
13-Apr-2025
சென்னை, ''சாலையோர வியாபாரிகள் இரவு 10:30 மணி வரை கடைகள் வைக்க, அரசு அனுமதிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:வேளச்சேரி தொகுதியில் அரசு புறம்போக்கு, கிராம நத்தம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா, விற்பனை பத்திரம் எதுவும் வழங்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் ஆய்வுக்குகூட வரவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சென்னை தரமணி வி.எச்.எஸ்., மருத்துவமனையையொட்டி, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திற்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலம் உள்ளது. சென்னையில் இதுவரை அரசு பொறியியல் கல்லுாரி இல்லை. எனவே, அங்கு அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.சாலையோர வியாபாரம் செய்பவர்கள் இரவு, 7:00 மணிக்குதான் கடை வைக்கின்றனர். காவல் துறையினர் இரவு 8:30 மணிக்கே கடையை மூடச் சொல்கின்றனர்.இப்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால், சாலையோர கடையை நம்பியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையோர வியாபாரிகள் இரவு, 10:30 மணி வரை கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு ஹசன் மவுலானா பேசினார்.
13-Apr-2025