உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூர் கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு

திருவள்ளூர் கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:எங்கள் பஞ்சாயத்திலும், அதை சுற்றிய பகுதியிலும் 26 பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களுக்கான திருத்திய சொத்து வரியை வசூலிக்க, வருவாய் வசூல் அதிகாரியை நியமிக்கும்படி, கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நடவடிக்கை எடுக்க, கடந்த ஆண்டு ஜூன் 23ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலெக்டர் அமல்படுத்தவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மார்ச் 1 க்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி