சென்னை, தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது.அதை முன்னிட்டு, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் குளத்தில், மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது.இரண்டாம் நாளான நேற்று வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். மூன்றாம் நாளான இன்று, ஆறுமுகபெருமானும் அருள்பாலிக்க உள்ளனர்.மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று வைகுண்ட பெருமாள், காமாட்சியம்மன் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.இரவு 8:30 மணிக்கு அன்ன வாகனத்தில் திருவீதி உலா வந்த காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், மூன்று நாள் தெப்ப உற்சவத்தில் நிறைவு நாளான இன்று, சிங்காரவேலர், தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். ஐந்து முறை வலம்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வெளியே இருக்கும் ஆதிசேஷ தீர்த்த குளத்தில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்.சில ஆண்டுகளாக, கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காததால், தெப்போற்சவம் தடைப்பட்டும், நிலை தெப்பமாகவும் நடந்தது. 'மிக்ஜாம்' புயல் கனமழையால் குளம் நிரம்பியது. இதையடுத்து 77 டிரம்களை பயன்படுத்தி, 20க்கு 20 என்ற அளவில், பிரமாண்ட தெப்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.நேற்றிரவு, விசேஷ மலர் அலங்காரத்தில் உற்சவர் சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், வேதமந்திரங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினர். தெப்பத்தின் மையத்தில் இருக்கும் நீராழி மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்தார். பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இம்முறை தெப்போற்சவத்தை படிக்கட்டில் அமர்ந்து பக்தர்கள் பார்க்க அனுமதிக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர்.
தியாகராஜர் ஐந்து முறை வலம்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வெளியே இருக்கும் ஆதிசேஷ தீர்த்த குளத்தில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடப்பது வழக்கம்.சில ஆண்டுகளாக, கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காததால், தெப்போற்சவம் தடைப்பட்டும், நிலை தெப்பமாகவும் நடந்தது.'மிக்ஜாம்' புயல் கனமழையால் குளம் நிரம்பியது. இதையடுத்து 77 டிரம்களை பயன்படுத்தி, 20க்கு 20 என்ற அளவில், பிரமாண்ட தெப்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது.நேற்றிரவு, விசேஷ மலர் அலங்காரத்தில் உற்சவர் சந்திரசேகரர் - திரிபுர சுந்தரி தாயார், ஆதிசேஷ தீர்த்த குளத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், வேதமந்திரங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினர். தெப்பத்தின் மையத்தில் இருக்கும் நீராழி மண்டபத்தை ஐந்து முறை வலம் வந்தார். பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இம்முறை தெப்போற்சவத்தை படிக்கட்டில் அமர்ந்து பக்தர்கள் பார்க்க அனுமதிக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர்.