உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி திருடனை பிடிக்க முயன்ற வாலிபருக்கு வெட்டு

வழிப்பறி திருடனை பிடிக்க முயன்ற வாலிபருக்கு வெட்டு

திருவொற்றியூர், திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கோபி, 36. இவர், நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர், தேரடி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.அப்போது, பாஸ்கர் என்பவரை, வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். இதை கோபி தட்டிக் கேட்டு மர்ம நபரை பிடிக்க முயன்றார்.ஆத்திரமடைந்த வாலிபர், கோபியை கத்தி மற்றும் பாட்டிலால் பலமாக தாக்கி, 500 ரூபாய் பறித்து தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த கோபி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து விசாரித்த திருவொற்றியூர் போலீசார், திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், 23, என்பவரை நேற்று கைது செய்தனர்.விசாரணையில், இவர் மீது திருட்டு வழக்குகள் இருப்பதும், திருவொற்றியூர் காவல் நிலைய பழைய குற்றவாளி என்பது தெரியவந்தது.விசாரணைக்கு பின், சிலம்பரசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ