தொட்டு விடும் துாரத்தில் மின் கம்பிகளால் ஆபத்து
மாதவரம், லட்சுமிபுரம், திலகர் தெரு சந்து பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக மின் கம்பம் உள்ளது. குறுகிய சந்தில் வீட்டை உரசியபடி உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. பலரும் மாடியை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். மேலும், குறுகிய சந்தின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தால், இரு சக்கர வாகனம் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது.இது குறித்து, ரெட்டேரி லட்சுமிபுரம் மின் வாரிய அலுவலக அதிகாரிகளிடம், பலமுறை புகார் செய்தும் மாற்று நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக, பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.- விஷால், லட்சுமிபுரம்