உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்லங்க சான்று கிடைப்பதில் காலதாமதம் பத்திரம் பதியாமல் வருவாய் இழப்பு

வில்லங்க சான்று கிடைப்பதில் காலதாமதம் பத்திரம் பதியாமல் வருவாய் இழப்பு

செங்குன்றம், செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சுற்று வட்டாரங்களின் வீடு, மனை விற்பனைக்காக, தினமும், 100 முதல் 150 பத்திரங்கள் பதிவாவது வழக்கம். இந்த நிலையில், வீடு, மனை வாங்குவோர், வங்கி கடனுதவி பெறுவோர், பத்திரப்பதிவிற்கு முன், இ.சி., எனப்படும், வில்லங்க சான்று பெறுவது வழக்கம்.அதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட வீடு, மனைகளில் ஏதாவது குளறுபடி உள்ளதா என்பதை தெரிந்து, தெளிவு பெறுவர். அதற்காக, செங்குன்றம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், அதிகபட்சமாக 30 ஆண்டுக்கான வில்லங்க சான்று பெற, 550 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதனால், சம்பந்தப்பட்டவருக்கு, மூன்று நாட்களில் வில்லங்க சான்று கிடைக்கும். அவசர பணி காரணமாக, 100 ரூபாய் கூடுதலாக செலுத்தினால், விண்ணப்பித்த அடுத்த நாளில் கிடைப்பது நடைமுறையாக உள்ளது.தினமும், 100க்கும் மேற்பட்டோர், வில்லங்க சான்று பெற விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி காத்திருக்கின்றனர்.இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக வில்லங்க சான்று கிடைக்க, ஒரு வாரத்திற்கும் மேலாகிறது. இதனால், குறித்த நாளில் பத்திரப்பதிவை முடிக்க முடியாமல், நுகர்வோர் அவதிப்படுகின்றனர். அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.நேற்று வரை, வில்லங்க சான்று கிடைக்காமல் அலையும் பலர், மாவட்ட பதிவாளரிடமும் புகார் செய்தனர்.இந்த நிலையில், ஓரிரு நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், சார் - பதிவாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.விரைவில் சீராகும்இங்குள்ள இரண்டு சார் - பதிவாளர்களில் ஒருவர், வழக்கு தொடர்பான நீதிமன்ற பணிகளை கவனித்து வருகிறார். மேலும், பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது. ஓரிரு நாட்களில், இந்த பிரச்னை சீராகி விடும். அதன்பின், காலதாமதமின்றி சான்றுகள் கிடைக்கும்.சார் - பதிவாளர்,செங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை