உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலையங்களில் ரயில் சேவை அறிய டிஜிட்டல் பலகை பொருத்தம்

நிலையங்களில் ரயில் சேவை அறிய டிஜிட்டல் பலகை பொருத்தம்

சென்னை, சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில், தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.சென்னை கோட்டத்தின் கீழ், உள்ள 160 ரயில் நிலையங்களில், பெரும்பாலும் புறநகர் ரயில் நிலையங்களாக இருக்கின்றன. ஆனால், ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை.குறிப்பாக, ரயில்களின் சேவை குறித்து, தெளிவாக கால அட்டவணை பலகை, பேனர்கள் இல்லாததால், பயணியர் குழப்பம் அடைவதாக, நவ., 17ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், மின்சார ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல்' தகவல் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பயணியருக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை, ரயில் நிலையங்களில் மேம்படுத்தி வருகிறோம். பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.மற்ற நிலையங்களுக்கும், டிஜிட்டல் பலகை வரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி